Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிறுத்துங்கள் மிஸ்டர் எடப்பாடி! பதவி வெறியில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் கே என் நேரு அதிரடி!

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஜூன் மாதம் அந்த கட்சி ஆட்சியிலமர்ந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் முதல் முறையாக பதவியேற்றார்.

அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்று பலவிதமான கோரிக்கைகளை தமிழக மக்களிடம் முன்வைத்தார் ஸ்டாலின் அதாவது சுமார் 500க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வைத்து பிரச்சாரம் செய்ததால் அதனை நம்பி தமிழக மக்களும் வாக்களித்தார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று சற்றேறக்குறைய 8 மாதங்கள் கடந்துவிட்டன.இந்நிலையில், திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பாதிக்குமேல் நிறைவேற்றியாகிவிட்ட்து என்று தமிழக அரசு மார்தட்டிக்கொள்கிறது.

ஆனால் தமிழக மக்களை பொறுத்தவரையில் தமிழக அரசின் எந்த ஒரு திட்டமும் முழுமையாக பொதுமக்களைச் சென்று சேரவில்லை. அதோடு திமுக அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என்பதே பொது மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மல்லூர், பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை வேலூர், வாழப்பாடி, உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை சந்தித்து அவர்களுடன் தேர்தல் வியூகம் தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்து தமிழக முதலமைச்சரின் சாதனை திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் எனவும், அடுத்த 3 நாட்களுக்கு ஓய்வின்றி தீவிரமாக பணிபுரிந்திட வேண்டும் என்றும் வேட்பாளர்களிடம் அவர் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த 13 வருட காலமாக ஆட்சியில் இல்லாத போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும்,அதேபோல கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க்கட்சியினர் யாரையும் தனி நபர் என்ற ரீதியில் விமர்சனம் செய்ததில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்த எதிர்க்கட்சித் தலைவர் தற்சமயம் ஆட்சியில் இல்லாமல் 6 மாதம் கூட தாங்க இயலாமல் பதவிக்காக உரையாற்றி வருகிறார். அதிமுக ஆட்சியின் 10 வருட காலத்தில் செய்ய முடியாத திட்டங்களை பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார் கே என் நேரு.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் நலத் திட்டங்கள் போன்றவற்றை அறிவித்திருக்கிறார். தற்சமயம் குடும்ப மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் மிக விரைவில் நிறைவேற்றாயிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆகவே தமிழக மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் பக்கம் திரும்பி விட்டார்கள். அதேபோல அதிமுகவுக்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே அடுத்த 10 வருட காலத்திற்கும் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் தான் நீடிப்பார். சேலம் மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிமுகவின் கோட்டை என்பதை உடைத்தெறிந்து 90% திமுக வேட்ப்பாளர்களே இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்கள் சேலம் மாநகரையும் நாங்கள் கைப்பற்றுவோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version