Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

#image_title

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரை முருகனின் 60 ஆயிரம் கோடி மணல் கொள்ளை மோசடி என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்து எந்த அமைச்சர், எம்.பி சிக்குவார் என்று அரசியல் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்து ரெய்டில் சிக்க போகும் அமைச்சர் குறித்து தகவல் கசிந்து இருக்கிறது. ராணிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் திமுக அமைச்சர் ஒருவர் பல கோடி செலவில் ஆடம்பர பங்களா கட்டி வருகிறாராம். இதனால் செந்தில் பாலாஜிக்கு அடுத்து ED ரெய்டில் சிக்க அமைச்சர் தயாராகி வருகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த அமைச்சர் வேற யாரும் இல்லை நம்ம தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி தான்.

சுமார் 1 1/4 ஏக்கர் பரப்பளவில் 120 கோடிக்கு மேல் கட்டப்பட்டு வரும் அமைச்சரின் பிரமாண்ட பங்களாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இவ்வளவு பணம் அமைச்சருக்கு எப்படி வந்தது? ஊழல் பணமா? என்ற கேள்வி தற்பொழுது அனைவரிடத்திலும் எழ ஆரமித்து இருக்கிறது. இன்னும் சில தினங்களில் அவர் வருமான வரி துறை அல்லது அமலாக்கத்துறை துறை வளையத்தில் சிக்குவார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர்கள், எம்.பிக்கள் என்று அடுத்தடுத்து ரெய்டில் சிக்கி வரும் நிலையில் கூடிய விரைவில் கைத்தறி துறை அமைச்சரும் இந்த வரிசையில் இணையப்போவதால் திமுகவின் முக்கிய தலைகள் கலக்கத்தில் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version