Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடு செருப்ப! அரசு ஊழியர்களை அமைச்சர் முன்னிலையிலேயே விளாசிய எம்எல்ஏ!

காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் தாங்கும் விதத்தில் தமிழக அரசின் சார்பாக சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிடடவை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகன் சட்டசபை உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் பார்வையிட்டார்கள்.

திமுக சட்ட சபை உறுப்பினரான எழிலரசன் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் செருப்பு பிஞ்சிடும் என்று அரசு ஊழியர்களை மிரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இவற்றை பார்வையிட எழிலரசன் வருகை தந்தார். அப்போது பயணியர் தங்கும் விடுதிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான ஏராளமான சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த காஞ்சிபுரம் திமுக சட்டசபை உறுப்பினர் எழிலரசன் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற அரசு நிலத்தில் லாரிகளை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை தடுக்காத அறநிலையத்துறை ஊழியர்களை அமைச்சர் மற்றும் ஆட்சியர் முன்னிலையிலேயே செருப்பு பிஞ்சிடும் என வசை பாடி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் முன்னிலையிலேயே அரசு ஊழியர்களை சட்டசபை உறுப்பினர் இப்படி வசை பாடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version