Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

#image_title

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்! 

பதவிப்பிரமாணத்திற்கு எதிராக திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மத அரசியல் செய்து வருவதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருகிறது இந்த தேர்தலை பற்றி இந்திய மக்களுக்கோ மற்ற கட்சிகளுக்கும் அக்கறை இல்லாத போது இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத அந்நிய வெளிநாட்டு மதவாத சக்திகளுக்கு இருக்கிறது. குறிப்பாக மதவாத, பயங்கரவாத  சக்திகளுக்கு இருந்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்காக தொலைநோக்கு பார்வையோடு செயல்படும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக களம் அமைக்க வேண்டும் என்று திட்டம் கொண்டு இந்தியாவில் இருக்கும் தேச விரோத கூட்டத்துடன் சேர்ந்து இந்த தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் லாபம் அடையலாம். முயற்சி செய்து வருகிறார்கள். அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவண பட வெளியீடு. இதன் தொடர்ச்சி தான் திருச்சி கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேச்சு.

அவர் கிறிஸ்துவ மக்களிடம் நாம் எப்படி முட்டி போட்டு திமுக கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தோமோ அதே போல் முட்டி போட்டு ஜெபம் செய்து 2024 இல் பாஜக கட்சியை அனுப்பிவிட்டு காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பாக பேசுவது எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு பிரமாணம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக் கொள்ளும் பதவிப்பிரமாணத்துக்கு எதிரானதாகும். அனைவருக்கும் பொதுவான ஒரு எம்எல்ஏ மத கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவதும் அதை கிறிஸ்துவ மிஷனரிகள் ஏற்றுக் கொள்வதும், மிஷனரிகள் மத செயல்பாடுகளை விட அரசியல் செயல்பாடுகளை தான் அதிகம் செய்து வருகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

பகுத்தறிவு என பேசிக் கொள்ளும் திமுக கிறித்தவ மக்களை முட்டி போட்டு ஜபம் செய்யும் எனக் கூறுவது எந்த வகையான பகுத்தறிவு என்பது நகைப்புக்கு உரியது. இவ்வாறான வழிகளில் பாராளுமன்ற தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளையும் மத்திய உளவுத்துறை மற்றும் உள்துறை விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேச விரோத செயல்களில் ஈடுபடும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மீது  ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

 

Exit mobile version