மரணமடைந்தார் திமுக வின் முன்னோடி – சோகத்தில் ஒட்டுமொத்த திமுக

0
183

மரணமடைந்தார் திமுக வின் முன்னோடி – சோகத்தில் ஒட்டுமொத்த திமுக

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் ஒருவாரம் முன்பு இருதயம் தொடர்பான பிரச்சனை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன் பின்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதயத்துடிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவருக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் எனினும் அவரின் நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன்அவர்கள் இன்று காலை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர் 57 வயதானவர் மேலும் 2019 ஆம் ஆண்டில் மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் கூட நிறைவு செய்யாத நிலையில் அவரது மரணம் அனைவரையும் சொகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்கள் முன்பு திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி அவர்கள் மரணமடைந்தார்.அவரது இறுதிச்சடங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த மரணமே திமுக நிர்வாகிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலையும் மிகவும் மோசமானதாக உள்ளதால் என்னுடைய பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் எனவும் நான் பிறந்தநாள் விழா கொண்டாடும் மனநிலையில் இல்லை எனவும்,பிறந்தநாள் அன்று என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருத்ததார்.

இவ்வாறு தொடர்ந்து சோகமான செய்திகளை கேட்டு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளதாக திமுக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.