Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சற்றுமுன்: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு பலி.!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

சென்னை சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் அவர்களின் கடைசி மகன் திரு அன்பழகன் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம் எல் ஏ சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன்னர் கொரனோ நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியமும் அவரது மனைவியும் சிகிச்சைக்குப் பின் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மா சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ திரு. அன்பழகன் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது திமுக எம்எல்ஏ சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனின் மரணம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Exit mobile version