Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போளுர் எம் எல் ஏ செய்த அந்த காரியத்தால்! நொந்து போன ஸ்டாலின்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஒதலவாடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அந்த முகாமை குத்துவிளக்கு ஏற்றி திமுகவின் எம் எல் ஏ கே வி சேகரன் தொடங்கி வைத்தார்.

சர்க்கரை, ரத்த அழுத்தம், மார்பகப் புற்று நோய் கண் பல் நோய்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து, மற்றும் மருத்துவ துறை சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி மக்களை கவர்ந்தது.

அந்த சமயத்தில் பேசிய கே.வி ஞானசேகரன் வருமுன் காப்பவன் தான் அறிவாளி என்ற கருத்திற்கு ஏற்ப,தற்போதைய அரசு மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றது.

அரசினுடைய மக்கள் நலனுக்கான செயல்பாட்டை நாங்கள் வரவேற்போம், எம்ஜிஆர், ஒரு ஞானி கருணாநிதியும், மக்களுக்கான கருத்தை எழுதியிருக்கின்றார்.

இந்த அரசு சிறப்பான முறையில் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட மக்கள் நலனுக்காக அதிமுக அரசின் திட்டங்கள் அனைத்தையும் வரவேற்போம் என்று தெரிவித்தார்.

எதிர்க் கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடையே நேரடியாகவே, அதிமுக அரசை பாராட்டி பேசியது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த விவகாரத்தை அவருடைய எதிர் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலு திமுக தலைவரிடம் கொளுத்திப் போட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது அதன் காரணமாக, வரும் சட்டசபை தேர்தலில் போளூர் தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட வேண்டும் என்று முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Exit mobile version