Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக வில் இணைகிறார் திமுக வின் முக்கிய புள்ளி!

ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார்.மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது இவருக்கு எப்படி பொறுப்பு வழங்கப்பட்டது என்று? உட்கட்சி பூசல் உருவானது.

திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க செல்வம் இந்த மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அவர்களுடன் டெல்லி சென்ற அவர் மாலையில் பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இது பற்றிய கேள்விக்கு திமுக வட்டாரம் மறுப்பு தெரிவித்துள்ளது.

1997 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கு.க.செல்வம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

Exit mobile version