Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக பிரமுகருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருடைய உடலிற்கு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அரக்கோணம் தொகுதியின் திமுக பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன் பல கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகின்றார். சமீபத்தில்கூட வரி எய்ப்பு தொடர்பாக அவருடைய 80 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை வசம் சென்றது. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் வசித்து வருகின்றார் இவருடைய மனைவி அனுஷியா.

இந்தநிலையிலேயே ஜெகத்ரட்சகன் அவர்களுடைய மனைவி அனுசுயா உடல் நிலை பாதிப்பு காரணமாக சென்னை குரோம்பேட்டை பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சென்ற ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே இன்று சிகிச்சை பலனின்றி அனுஷியா உயிரிழந்தார், இதனையடுத்து அவருடைய உடல் அடையாறில் இருக்கின்ற அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கின்றது ஜெகத்ரட்சகனின் மனைவியின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அனுஷியாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஜெகத்ரட்சகன் எனக்கு ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version