Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!!

#image_title

மீண்டும் சொந்த தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி.கனிமொழி!!

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தூத்துக்குடு தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக எம்.பி கனிமொழி.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் அனைவரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை திமுக சார்பில் 400 க்கும் மேற்ப்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வகையில், இன்று காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்பமனுவை தாக்கல் செய்தார் எம்.பி.கனிமொழி.

தூத்துக்குடியில் கனிமொழியே போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து ஏற்கனவே 70 க்கும் மேற்ப்பட்ட திமுக நிர்வாகிகள் கனிமொழி பெயரில் விருப்பமனு அளித்துள்ள நிலையில் இன்று எம்.பி.கனிமொழி விருப்பமனு அளித்துள்ளது குறிப்பிடதக்கது.

Exit mobile version