Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக நிர்வாகியை செருப்பால் அடிக்க முயன்ற திமுக எம்எல்ஏ! வீடுபுகுந்த சிசிடிவி காட்சி வெளியீடு.!!

மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான மூர்த்தி, பாஜக நிர்வாகியான சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று தனது காலில் இருந்து செருப்பை கழட்டி வீடுபுகுந்த அடிக்க நினைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் ஒரு மருத்துவர் மட்டுமல்லாமல் அப்பகுதி பாஜக கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் சமூகத்தில் நடக்கும் பல்வேறு விசயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். சமீபத்தில் அப்பகுதியில் இருந்த கண்மாய் ஒன்று காணாமல் போனமாக போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல்பாடு திமுக பாதித்ததா என தெரியவில்லை.

இந்நிலையில் மதுரை கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, சங்கரபாண்டியனின் வீட்டிற்கே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி வீட்டு காம்பவுண்ட்டுக்குள் புகுந்து கையை ஓங்குகிறார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த நாட்களில் வெளிநாட்டில் இருந்தபோது மூலப்பத்திரம் கேட்டு பதாகையுடன் சங்கரபாண்டியன் போராடினார். மதுரையில் ஸ்டாலின் காரை மறித்து போராட்டம் நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version