Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவின் அநாகரிக பேச்சை கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!

திமுகவின் அநாகரிக பேச்சை கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. தான் பேசியதற்காக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிடமும் அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்த சம்பவத்தில் சிறிதும் தனக்கு தொடர்பில்லாத நபர்களைப்போல் நடந்து கொள்ளும் முற்போக்கு சிந்தனையாளர்கள் எந்த கருத்தையும் முன்வைக்காமல் தலைமறைவாக இருப்பதாக புதிய விமர்சனங்கள் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒரு முற்போக்காளர் கூட இதுகுறித்து எந்த கருத்தும் சொன்னதாக தெரியவில்லை
என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதி பேசியதை போல் ஒரு பாஜக நிர்வாகி பேசியிருந்தால், பார்ப்பணத் திமிர் என்று கதைவிட்டிருப்பார்கள். தமிழ்நாடே கருத்தியல் புரட்சியை கையில் எடுப்பது போல் பிம்பம் உருவாகியிருக்கும். முற்போக்கு கருத்தியல் பேசும், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், ஆளூர்.ஷானவாஸ், பாமகவிடம் கருத்தியல் ரீதியாக மோதும் அரசியல் கட்சியான விசிகவின் வன்னியரசு, திருமாவளவன் போன்றோர் கூட இந்த சம்பவத்திற்கு கண்டனமோ, அறிக்கையோ விடவில்லை மற்றும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தோழர் சுந்தரவள்ளி, பா.ரஞ்சித், சுபஸ்ரீ ஆகியோரும் திமுகவின் அநாகரிக பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் தனது கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

தனது சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் கொள்கைகளை நாணல் போன்று வளைத்துக் கொள்வதுதான் முற்போக்கு சிந்தனையா..? தனக்கு தேவைப்பட்டால் முற்போக்குத் தனமாக பேசுவதும், நியாயமாக பேச வேண்டிய இடங்களில் எதுவும் பேசாமல் தலைமறைவாக இருப்பவர்கள் எப்படி முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்க முடியும்..? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆதி திராவிடர்களுக்கு பிச்சை போட்டதாக சொல்லப்பட்ட உச்சகட்ட அநாகரிக பேச்சுக்கு கூட எந்த இயக்கமும், முற்போக்கு சிந்தனையாளர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக பேசினால் தலைமறைவாக இருப்பதும், மற்ற கட்சிகளோ இயக்கங்களோ பேசினால் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குவதுதான் முற்போக்குதனமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த சம்பவத்தின் காரணமாக பொதுத் தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version