குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

0
237

டெல்லி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த சமயத்தில் திமுக இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.

நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தனர், அதன் முடிவில் மத்திய அரசு அந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற்றது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்ற மனதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டிருக்கிறது.

பல வருட காலமாக தமிழகத்தில் தங்கி இருக்கின்ற இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பது புதிய நடைமுறையாக இருக்கிறது. இது மதச்சார்பற்ற கொள்கையை சிதைத்து விடும் என்று அந்த மனுவில் திமுக தெரிவித்து இருக்கிறது.

ஆனால் இலங்கை அகதிகளை கேடயமாகக் கொண்டு சிறுபான்மையினருக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக பலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

அதே நேரம் இந்து மக்களை அவ்வப்போது கொச்சைப்படுத்தி வரும் திமுக, எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. அதற்கு காரணம் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சிக்கும் போய்விடக் கூடாது என்பதுதான் என்றும் கூறப்படுகிறது.

மதச்சார்பற்ற கொள்கை என்று தெரிவிக்கும் திமுக, இந்துக்கள் பண்டிகைகளுக்கு இதுவரையில் முதலமைச்சர் வாழ்த்து இருக்கிறாரா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்துத்துவ ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒருபுறம் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று பிரச்சாரம் செய்தாலும் திமுக எப்போதும் சிறுபான்மையினர் பக்கமே நிற்கிறது என்பதுதான் பொதுவானவர்களின் கருத்தாக இருக்கிறது.