Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டசபையில் ஸ்டாலின் ஆற்றிய உரையால் வாயடைத்துப் போன சட்டசபை உறுப்பினர்கள்!

தமிழக சட்டசபையில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சராக தன்னுடைய முதல் உரையை நிகழ்த்தினார்.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னதைப் போல ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நாங்கள் செயல்படுவோம் நாங்கள் அண்ணாதுரையின் தம்பியர்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழ தொடங்கியது காரணம் முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கின்ற ஸ்டாலின் சற்றே அரசியல் அனுபவம் உள்ளவர். அவரை எதிர்த்து அரசியல் செய்யும் திராணி உள்ள ஒருவரைத்தான் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்ய முடியும். அப்படி செய்தால் தான் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும், சரி சமமான பலம் இருப்பதாக கருதலாம்.

அதன் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பை ஏற்று இருந்தாலும் தமிழகத்தின் முதல்வர் என்பதைவிட தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பே தமிழகத்தில் அனேக இடங்களில் காணப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவர் செயல்பட்ட விதம், அவர் ஸ்டாலினிடம் எதிர் கேள்வி கேட்ட விதம் போன்றவற்றை மனதில் வைத்து இவருக்கு சரியான ஆள் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று மக்கள் முன்னரே கருதத் தொடங்கி விட்டார்கள்.அதன்படியே அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த சமயத்தில் ஸ்டாலினும் எடப்பாடி பழனிச்சாமியும் எலியும் பூனையுமாகவே இருந்தார்கள்.

ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவரை பற்றி நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர் தெரிவித்தது எல்லோரையும் வாயடைக்க வைத்ததாக சொல்கிறார்கள்.

Exit mobile version