Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் சித்தப்பா அமைச்சர் பினாமி, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகன்..!

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைலியாக திமுவை சேர்ந்த கோமதி இருந்து வருகிறார். இவரது மகன் வெற்றிசெல்வன் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அந்த சிறுமியின் பெற்றோரை மிரட்டி வெற்றிசெல்வனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு அவர் தனது தந்தை மற்றும் அந்த சிறுமியுடன் மதுரையிலேயே வசித்து வந்துள்ளார்.வெற்றிசெல்வன் மீது ஏற்கனவே பல்வேறு கொலை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் இருந்துள்ளது. மேலும், அவர் மது, கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்துள்ளார்.

தினமும் குடித்து விட்டு வந்த அந்த சிறுமியை அடித்து உதைத்தது மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி தான் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கபோவதாக தெரிவித்துள்ளார். அதனை கேட்டு ஆத்திரமடைந்த வெற்றிசெல்வன் தன்னுடைய சித்தப்பா திமுக அமைச்சரின் பினாமி என்ரும் தன்னை காவல்துறையினர் ஒன்றும் செய்ய முடியாது என கூறி மிரட்டியதோடு அந்த சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் அந்த சிறுமியை தாக்கியதில் படுகாயமடைந்தார்.உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெற்றிசெல்வம் மீது போக்சோ, குழந்தை திருமணம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

இதனை அடுத்து, தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.ஆட்சியில் இருப்பதால் தப்பித்து விடலாம் என நினைத்து ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் சிறுமியை கொடூரமாக கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்குமா? அல்லது வெற்றிசெல்வன் கூறியது போலவே அவர் தப்பித்து விடுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது.

Exit mobile version