Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதற்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சை பெறுவதற்காக கூப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

இந்த நிலையில், இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன் ஸ்டாலின் அவர்களை அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசிய அமைச்சர் உதயகுமாரை கண்டிக்கும் விதமாக அவரது வீட்டின் முன்பு ஆயிரம் இளைஞர்களுடன் கருப்புக்கொடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அப்போது ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பார் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version