பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக!

0
118
DMK protested against the Pegasus affair in this way!

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக!

நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் காலம். ஆனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதிலும், மதியம், மாலை என ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அந்த விசயத்தில் எதற்கு மத்திய அரசு மௌனம் காக்கின்றது. எங்களுக்கு வெளிப்படையான உண்மை தெரிய வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டன.

ஆனால் மோடி அரசோ அதற்கு மௌனம் சாதித்த நிலையில், நேற்று தான் நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. அதை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது. புதிய வேளாண் சட்டங்கள், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, போன்ற பிரச்சினைகளால் நாடாளுமன்றம் தினந்தோறும் முடங்கி வருகிறது. நேற்றும் வழக்கம் போல் அமளி ஏற்பட்டதால்,  நாடாளுமன்றம் முடங்கியது.

ஆனால் இவ்வளவு அமளிகளுக்கு இடையிலும், ஸ்மிருதி இராணி பல சட்டங்களை கையெழுத்திட்டு இயற்றினார். இதை ஒரு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பாராட்டி வீடியோ எடுத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் சண்முகம் உள்ளிட்டோர் நேற்று கருப்புச்சட்டை அணிந்து சென்றனர். இது குறித்து திருச்சி சிவா அவர்கள் கூறுகையில் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறாமல் உள்ளன. விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி வருகிறோம்.  காப்பீட்டு துறையின் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதிக்கும் காப்பீட்டு மசோதாவையும் எதிர்க்கிறோம். இதனால் கருப்புச்சட்டை அணிந்து எங்களது எதிர்ப்பை பதிவு செய்கிறோம் என்று கூறினார்.