அந்த விஷயத்தில் சீமான் ஜித்தன்… கொடைக்கானல் எஸ்டேட் மேட்டரை அவிழ்ந்து விட்ட முக்கிய பிரமுகர்…!

0
174
Seeman

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட உள்ள அவர் கடந்த 15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கடந்த ஆண்டுக்கான தனது ஆண்டு வருமானத்தை குறிப்பிட்டிருந்தார். இதில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

Seeman

 

அந்த வேட்புமனு சோசியல் மீடியாவில் வைரலாக சீமானை அனைவரையும் கிழித்தெடுக்க ஆரம்பித்தனர். மகன் காதுகுத்துக்கே 108 கிடா வெட்டி விருந்து வைத்த சீமானின் ஆண்டு வருமான 1000 ரூபாய் தானா?. யாரை முட்டாள் ஆக்க சீமான் இந்த வேலையை செய்தார் என சகட்டுமேனிக்கு விமர்சனங்கள் பாய்ந்தது.

இதையடுத்து வேட்புமனு தாக்கலில் தட்டச்சு பிழை காரணமாக தவறு ஏற்பட்டு விட்டதாக சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனால் சீமான் மீண்டும் சரியான வேட்பு மனுவை தாக்கல் செய்யப்போகிறார் என தகவல்கள் வெளியாகின. முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குபவருக்கு ஒரு வேட்புமனுவை கூட பிழை இல்லாமல் தாக்கல் செய்ய தெரியதா? நெட்டிசனகள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, சீமானின் மற்றொரு அப்பட்டமான பொய்யை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அவனும் இவனும் சரில்லை நானே மாற்று நான் மட்டுமே வெளிப்படையான நிர்வாகம் தருவேன் என மூச்சுமுட்ட கைஉயர்த்தி பேசி 2015ஆண்டு குடும்ப வருமானம் 42378என அரசிடம் கணக்குகாட்டிட்டு அதே ஆண்டு25லட்சத்திற்கு 6ஏக்கரில் கொடைக்கானலில் எஸ்டேட் வாங்கும் தந்திரம் தெரிந்தால் நாம் புரட்சியவாதியே! எனக்கூறி அந்த எஸ்டேட் தொடர்பான ஆவணங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.