தேர்தல் தொடங்கிய காலத்திலிருந்தே திமுகவினர் ஆங்காங்கே தங்களுடைய ரவுடியிசத்தை காட்ட தொடங்கினார்கள். அது மக்களிடையே மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு முன்னரே அந்த கட்சியை சார்ந்தவர்கள் பிரியாணி கடைகளிலும், பியூட்டிபார்லலும் தங்களுடைய கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்.பொதுவாக திமுக என்றாலே ரவுடிகும்பல் என்ற கருத்து இருக்கிறது.
இந்த நிலையில் வாணியம்பாடி அருகே அந்த கட்சியினர் பனப்பட்டுவாடா செய்வதை தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவல்துறையினரை திமுகவின் நிர்வாகிகள் தாக்கியிருக்கிறார்கள்..அதோடு அவர்கள் பறிமுதல் செய்த பணத்தையும் பிடிங்கிச்சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் விஸ்வநாதனுக்காக வாணியம்பாடி அருகிலுள்ள மதனாஞ்சேரி பகுதியில் திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்வதையறிந்த காவல்துறையினர் திமுகவினரிடமிருந்த 52500 ரூபாயை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அப்போது திமுக நிர்வாகிகளை கைது செய்ய முயன்ற காவல்துறையினரை உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர் திமுகவை சார்ந்த செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள்.
திமுகவைச் சார்ந்த நிர்வாகிகளின் இந்தக் கொடூர தாக்குதலால் உதவி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் உள்பட 4 காவலர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் உடனடியாக பொதுமக்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் திமுக நிர்வாகி ரவியை மட்டும் கைது செய்து இருக்கிறார்கள். அதோடு தப்பியோடிய மற்ற திமுக நிர்வாகிகள் செல்வராஜ் பெருமாள் உள்பட திமுக குண்டர்கள் 8 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.