குரங்கை வைத்து ஆழம் பார்த்த திமுக.! உஷாரான கூட்டணி கட்சிகள்..!

0
129

குரங்கை விட்டு ஆழம் பார்ப்பது போல இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமீபகால செயல்பாடுகள் அனைத்தும் இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் 200 இடங்களில் போட்டியிட இருப்பதாக முதலில் செய்தி வந்தது அப்படி என்றால் தங்களுக்கு மீதமுள்ள 34 இடங்களில் தானா என்று அந்தக் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதுதொடர்பாக ஊடகங்களிலும் விவாதங்கள் உடனடியாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் இது எதிரணியின் சதி என்று சமாளிக்க முயற்சி செய்தார்.

இப்பொழுது அது அடுத்த கட்டத்தை நோக்கி சென்று விட்டது திமுக தேர்தல் வியூக பொறுப்பாளராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறார். அப்போது திமுக அதிக இடங்களில் போட்டியிட்டு ஆக வேண்டும் என்கின்ற நிபந்தனையை மீண்டும் ஒருமுறை தெரிவித்திருக்கிறார். அப்படி செய்தால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துவிடும் என்று ஸ்டாலின் பதில் சொல்ல, நீண்ட விவாதத்திற்கு பின் ஒரு முடிவுக்கு வந்து இருக்கின்றார்கள். அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு கூட்டணி கட்சியும் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு தலா மூன்று முதல் நான்கு இடங்கள் வரை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் தவிர மற்ற கூட்டணி கட்சிகள் பாதி இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் அது போக மீதி இடங்களில் அவரவர் விரும்பும் சின்னத்தில் போட்டியிட்டு கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆவலாக உள்ள சில பத்திரிகைகள் மூலம் இந்த செய்தியினை கசியவிட்டிருக்கிறது திமுக தரப்பு இந்த தகவலை அறிந்ததும் கூட்டணி கட்சிகள் இடையில் உரசல் ஏற்பட்டு இருக்கின்றது. அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுகவிற்கு எதிராக மிக அதிகமான அதிருப்தி அலை இருந்து வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டப்படி நாம் இரண்டு அல்லது மூன்று இடங்களில் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும் மற்றப்படி உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் இவ்வாறு நம்பிக்கை துரோகம் இழைக்கிறது கொந்தளிக்கிறார்கள் இந்த கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஆனால் அடுத்த கட்டமாக, எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் தலைமைகள் ரகசியமான ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைகளில் தங்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுகுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.