Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்!

DMK secretary comfortable! Confiscation of millions of unaccounted documents!

DMK secretary comfortable! Confiscation of millions of unaccounted documents!

வசமாக சிக்கிய திமுக செயலாளர்!  கோடிக்கணக்கில் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல்!

இந்த காலகட்டத்தில் கடல்வாழ் அரியவகை உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது .அதனை பாதுகாக்கும்படி அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அதனை யாரும் பிடிக்க கூடாது என்றும் ,அவ்வாறு பிடித்தால் அது கடத்தப்படுவதற்கு சம்பந்தமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படும் எனவும் சட்டத்தின் மூலம் கூறிவருகின்றனர்.ஆனால் சிலர் அவர்கள் அதிகாரங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அரியவகை கடல்வாழ் உயிரினங்களை  கடத்தி வருகின்றனர்.

இந்த உயிரினங்கள் பல வாஸ்து மற்றும் மருத்துவத்திற்கும் பயன்படுத்துவர்.அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் தான் வில்லாயுதம்.இவர் அரசு தடை செய்யப்பட்ட கடல் அட்டை,கடல் குதிரை போன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார். அதனை போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்தனர்.தற்போது அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.நேற்று மாலை அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.அவர் நடத்தும் விடுதி,மீன் நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது இரவு 7 மணிவரை நடந்தது.இந்த சோதனை மூலம் வருவாய் சம்பந்தமான ஆவணங்கள் கண்டறியப்பட்டது.அதுமட்டுமின்றி அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களையும் அமலாக்கத் துறையினர் கண்டறிந்தனர்.இந்த சொத்துக்கள் அனைத்தும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை கடத்தி விற்றதன் மூலம் வாங்கப்பட்டது என கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி இவர் அரசாங்கத்திற்கு எதிரான அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை கடத்துவதின் கீழ் பலபேர் செயல்பட்டு வந்ததாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அமலாக்கத் துறையினர் இரவு வரை சோதனை நடத்தி பல கோடி மதிப்பிலான கணக்கிற்கு வராத ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்து காணப்படுகின்றனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது கணக்கில் வராத கோடிக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதால் அவர் மீது கூடுதல் வழக்குகள் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version