Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்!

R S Bharathi

R S Bharathi

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்!

மறைந்த முதல்வர் மற்றும் எடப்பாடியாரை குறித்து பேசிய திமுகவின் செயாலாளர் மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் தி.மு.கவின் பொது செயலாளர் மக்கள் பிரசாரக் கூட்டத்தில் கூறியதை கேட்ட  அ.தி.மு.கவினர் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்

சென்னையில்லுள்ள அம்பத்தூரில் திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியது, நான் முதல்வர் எடப்பாடி மீது ஊழல் வழக்கு போட்டேன்.அவர் அதை நேரடியாக எதிர்கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்துக்கு சென்று உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்கியிருந்தார்.துணிவில்லா காரணத்தினால் இத்தகைய காரியத்தை செய்தார்.

இதைத்தான் திமுக தலைவர் அழகாக சொன்னார்,எடப்பாடி “ஸ்டேட் சீப் மினிஸ்டர் அல்ல,ஸ்டே சீப் மினிஸ்டர்”.ஸ்டே ஆர்டராலத்தான் ஆட்சியே ஓடிக்கிட்டு இருக்கு.தமிழகம் முழுக்க ஆளுங்கள பிடிச்சுட்டு  வந்து மெரினா கடற்கரையில் இறக்குலாம் என்று இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் நினைத்தார்கள்.வந்த கூட்டம் முளுக்க அந்த மூதேவி முகத்தை பார்க்க விருப்பம் இல்லாமல் கருணாநிதி நினைவிடத்தை பார்க்க வந்தார்கள் என கடுமையாக பேசினார்.

மேலும் அவர் கூறியது,உங்க கிட்ட காச வாங்கிட்டு ,உன் கரைவேட்டியை கட்டிக்கொண்டு என் தலைவனுக்கு தான் அஞ்சலி செலுத்தினார்கள்.அதுக்கு காரணம் “தட் ஈஸ் த பல்ஸ் ஆப் த பீபுள்”என ஆங்கிலத்தில் உரைத்தார்.மேலும்,சென்னையில் இருக்குற ஜெயக்குமார் ஆபிஸ் க்கு  25  வயசுக்கும் கீழே உள்ள மாணவர்கள் அங்க செல்ல முடியாது.ஏனென்றால் ஜெயக்குமார் அவ்வளவு யோக்கியமான மனுஷன் என வாட்டி வதக்கினார்.இதையடுத்து பத்தரை மாத்து தங்கம் சிகாமணி எங்களை பார்த்து வாரிசு அரசியல் என்று கூறுகிறார்.உங்களுக்கு வாரிசு இல்லையென்றால் எங்களால் ஏற்பாடு செய்ய முடியமா? என சர்ச்சைக்குரிய கேள்வியையும்  கேட்டார்.

அந்தம்மா சசிகலாவின் காலில் விழுந்து பதவியை வாங்கி விட்டு இப்பொழுது நன்றிகெட்ட நாயைப் போல் நடந்து கொள்கிறான்.ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைபவனுக்கு எல்லாம் நல்ல முடிவு ஏற்பட்டதா சரித்தரம் இல்லை என ரஜினி பட வாக்கில் வசனம் பேசினார்.எம்.ஜி.ஆர் கூட அப்படி தான் கடைசி காலத்தில் அவரால் பேச முடியமால் போச்சு என வார்த்தைகளை தெறிக்கவிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஆர்,எம்.வீயை நீங்கள் முதல்வர் ஆக்கவில்லை ஜானகியை தானே முதல்வராக மாற்றம் செய்தீர்கள்.அதன் பிறகு 25 வருடங்களாக எம்.ஜி.ஆருக்கு மனைவியாக நடித்து வரும் ஜெயலலிதா அவர்களை  முதல்வராக உருவம் செய்தீர்கள்.ஏன் உங்களால் நெடுஞ்செழியனை முதல்வராக்க முடியவில்லை என பல கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.

இவர் பேசிய பேச்சுக்கு எதிர் பேச்சாக அ.தி.மு.க செய்தி தொடர்பாளர்களை சந்தித்து செல்வன் கூறியதாவது, தி.மு.க.வின் கழிவு பொருள் தான் ஆர்.எஸ்.பாரதி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் தான் வீசும். நல்ல மனங்கள் மணக்காது.இப்படி சாக்கடைகளின் சங்கமான தி.மு.க.வில் இருந்து கொண்டு ஆர்.எஸ்.பாரதி அருவக்கதக்க வார்த்தைகளால் மேடையில் உமிழ்ந்து கொண்டு வருகிறார்.

கொரோனா காரணம் கருதி வழக்கில் இருந்து தப்பி ஓடும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களின்  நாக்கை அறுத்து விடும் அளவுக்கு பேச எங்கள் கட்சியில் ஆட்கள் உள்ளனர்.நாகரிகம் கருதி அமைதி காத்து வருகிறோம் எனவும் பேசினார்.

Exit mobile version