மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!! ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி!
சென்னையில் மத்திய அரசின் 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பேசியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் அவர், பிரதமரின் தூதர்கள் என்று அண்ணாமலையை பாராட்டினார். பிரதமரின் கரிக் கல்யாண் திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களுக்கும் பெரும் பயனடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நேர்மையான தமிழகம் மாற வேண்டும் எனபது பிரதமர் எதிர்பார்ப்பதாக கூறினார்.
ஊழல் அற்ற பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் எண்ணம் ஆனால் ஊழல் இல்லா தமிழகமும் உருவாக வேண்டும் என தெரிவித்தார். தற்போதைய ஆட்சி ஊழல் உள்ளது. ஏனென்றால் குடும்ப அரசியல்தான் நடக்கின்றது எனக்கு கூறினார்.இதனால் தமிழகம் வளர்ச்சி அடைவது மிகவும் சிக்கலானது. அதுமட்டுமின்றி மத்திய அரசு வழங்கும் திட்டங்களில் கூட பிரதமர் மோடியின் படத்தை வைப்பதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவருடைய படத்தையே வைத்துக் கொள்கிறார். அவரது படத்தை வைப்பதற்கு கூட திமுக பயப்படுகிறது.
தற்பொழுதைய தமிழகத்தில் இருக்கும் ஆளும் கட்சியானது மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கிடைக்க விடுவதில்லை. ஏனென்றால் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு கிடைத்துவிட்டால் திமுக ஆட்சிக்கு களங்கம் வந்து விடுமோ என்ற பயம் உள்ளது. இதனால் தமிழக பாஜகவினர் தான் அண்ணாமலையின் சொல் கேட்டு அவரின் வழிகாட்டுதல் படி அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் வழி செய்ய வேண்டும். தமிழக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் அண்ணாமலை ஒருவரை செய்து வருகிறார்.
குறிப்பாக மத்திய அரசு தரமான அரிசியை வழங்கிய போதிலும் அதனை தடுத்து நிறுத்தி தமிழக அரசு தர மற்ற அரிசியையே மக்களுக்கு விநியோகம் செய்கிறது. சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மத்திய மற்றும் இதர தலைவர்களை இழிவாக பேசுவது ஏன் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக இந்திய நாட்டின் பிரதிநிதியான மோடி அவர்களையும் அவ்வாறு தான் பேசுகின்றனர். பிரதமரை இழிவாக பேசுவதற்கு அவர் ஒன்றும் அரசியல் கட்சி தலைவர் அல்ல எனக் கூறினார்.
இவர்கள் பேசுவது போல் பாஜகவில் யாரும் எந்த தலைவர்களையும் தரம் குறைத்து பேசுவதில்லை. இவ்வாறு தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கும் பட்சத்தில் தாமரை விரைவில் மலரும். தமிழகத்தில் மூன்று குடும்பம் மட்டும் வளர ஆட்சி செய்யக்கூடாது அனைத்து குடும்பமும் வளர வேண்டும் என தெரிவித்தார்.