DMK: அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி குறித்து நீதிமன்றம் வைத்த கேள்விக்கு எதிராக கட்சிக்குள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பதவிக்கு மீண்டும் கெடு விளைக்கும் விதமாக நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனைகளுடைய ஜாமீனில்ல் வெளியே வந்தார்.
திமுக வானது அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டு சிம்மாசனத்தில் அமர்த்தினர். இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இவர் மீண்டும் அமைச்சராக இருப்பதால் இவருக்கு எதிராக சாட்சியங்கள் சொல்ல தயங்குவதாக அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். குறிப்பாக இவருக்கு எதிரான தடயவியல் நிபுணர் என தொடங்கி அரசு நிர்வாகிகள் வரை பலரும் முன் வர அஞ்சுகின்றார்களாம்.
இதற்கு முக்கிய காரணம் இவரது பதவி என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி வழக்கறிஞர்களிடம் இவர் தொடர்ந்து பதவியில் வகிக்க போகிறாரா?? என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர். இது குறித்து தெளிவான விளக்கத்தை மார்ச் 4ஆம் தேதி அளிக்கும் படி தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து திமுக தலைமையில் இது குறித்த பேச்சு வார்த்தை தான் நடந்து கொண்டிருக்கிறதாம்.
மீண்டும் தொடர் பதவியில் செந்தில் பாலாஜி இருப்பார் எனக் கூறி விட்டால் இவரது நிபந்தனைகளுடனான ஜாமீனானது ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக இவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர் மீண்டும் சிறை வாசம் அனுபவிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாம். அதுவே வேறு ஒருவர் இவரது பதவிக்கு அமர்த்த வேண்டுமென்றாலும் சற்று கடினம், அப்படி அமர்த்தினால் யார் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அரசியல் சுற்றுவட்டாரங்கள் கூறுகின்றனர்.