சமீப காலமாக அதிமுகவில் தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய பலருக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிய நபர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் அதிமுகவில் இருக்கக்கூடிய பலரை அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். அதோடு பல்வேறு இடங்களில் வேட்பாளர்களை மாற்றவேண்டும் என்று தெரிவித்து போராட்டங்கள் வெடித்து வந்தன. ஆனாலும் அதிமுக தலைமை இதனை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த திமுக தலைமை உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக சார்பாக தொலைக்காட்சிகள் அனைத்திலும் அதிமுக சார்பாக நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் தினம் தோறும் வந்து கொண்டே இருந்தன.ஆனால் தற்சமயம் திமுகவில் இதே போன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது திருப்பத்தூர் சட்டசபைத் தொகுதியில் தற்சமயம் சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய நல்லதம்பிக்கு அந்த கட்சியில் மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக சார்பாக விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இருந்தாலும் இந்த தேர்தலில் அவருக்கு திமுக சார்பாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆகவே ராஜேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த திருப்பத்தூர் திமுகவை சார்ந்தவர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறார்கள்
.இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான ராஜேந்திரன் வேட்பாளர் அறிமுக கூட்டம் கட்சியின் பிரச்சாரம் அதோடு கட்சியின் அலுவலகத்திற்கும் வராமல் அந்த கட்சியை புறக்கணித்து வீட்டிலேயே இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு திமுகவிற்கு ஆதரவு அவருடைய ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்வதற்கு செல்வதில்லை என்று முடிவு கட்டி விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.