Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்சிக்கு ஆன்லைன் மூலம் ஆள் சேர்க்கும் திமுக! ஸ்டாலினின் புது திட்டம்!

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. அதிலும் திமுக கட்சி விடியல் விரைவில் வரும் என்று கூறிக் கொண்டும், திமுக வெற்றி பெறும் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை என்று கூறிக்கொண்டு வருகிறது.

திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆன்லைன் மூலம் கட்சிக்கு  ஆள் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேலும் 25 லட்சம் பேர்களை சேர்த்திருக்க வேண்டும் அதுவும் 45 நாட்களுக்குள் என்று தீர்மானம் எடுத்துள்ளார்கள். ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் அனைவருக்கும் இருக்கும் அதே உரிமை ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் ஆகும் அனைவருக்கும் உண்டு என்று அறிவித்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களின் விவரத்தை அந்தந்த ஊர் பிரதிநிதிகள் சரிபார்த்த பின்னரே பதிவு செய்தவர்கள் உறுப்பினராக அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் ஒரு வருட காலம் உறுப்பினராக இருக்கும் நபர்கள் மட்டுமே உட்கட்சி தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உடையவர்களாம்.

புதிதாக சேரும் நபர், 25 நபர்களை சேர்த்தால் கட்சி தேர்தல்களில் தனது பங்களிப்பை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் 72 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கும் மேலாக ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர் என்ற தகவலை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version