திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக!

0
120
DMK victory journey! AIADMK in a series of setbacks!

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக!

கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி 234 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வெற்றி கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று மக்கள் எதிபார்த்து காத்து கொண்டிருந்தனர்.அந்நிலையில் காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 13 இடங்களில்  திமுகவும், 4 இடங்களில்  அதிமுகவும் முன்னிலை வகித்தன. ஆரம்பம் முதலே திமுக வெற்றி முனைப்பில் முன்னிலை கண்டது.

இதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திமுக தொடக்கம் முதலே கிடுகிடுவென முன்னிலையை எட்டியுள்ளது. தற்போது வரை திமுக 133 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று 33  தொகுதிகளில் பின்னடைவில் உள்ளது. முதல் முறையாக தமிழக சட்ட மன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுயில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் 20000-ம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனை தொடர்ந்து வாக்கு  என்னும் இடங்களில் கொரானா கட்டுபாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பது தெரிய வரும்.வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாதென்று தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதி மன்றம் வழியுறுத்தி உள்ளது. அதனால் வெற்றி கொண்டாட்டங்கள் அவரவர் வீடுகளில் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.