DMK vs CONGRESS: திமுக-விற்கு எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பகீர் பேச்சு!!

0
160
DMK vs CONGRESS: Must act as opposition to DMK - Congress Executive Bagheer Speech!!

DMK vs CONGRESS: திமுக-விற்கு எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பகீர் பேச்சு!!

காங்கிரஸின் மூத்த நிர்வாகியான செல்வ பெருந்தகையின் சமீப ரீதியான தாக்குதல் அனைத்தும் திமுகவை எதிர்த்து தான் காணப்படுகிறது.இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 10.67% சதவீத வாக்கை பெற்றுள்ள நிலையில் அவர்களுடன் சார்ந்து தான் இருக்க வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பினார்.மேலும் அடுத்த முதல்வர் செல்வப் பெருந்தகை என்ற பேச்சுக்களும் அடிபட்டது.

இதனால் இவற்றின் தோழமை கட்சியான திமுக அதிருப்திலேயே இருந்தனர்.இவரை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் முடிந்த மக்களவைத் தேர்தலிலிருந்து தற்பொழுது வரை பாஜகவை ஒரேடியாக ஒதுக்கி வைத்துள்ளார்.அதுமட்டுமின்றி எடப்பாடி அவர்கள், சமீபத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரை பற்றி மிகவும் மதிப்புடன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது .

இதனை வைத்து பார்க்கும் பொழுது வரும் சட்டமன்றத் தேர்தலில் இவர்களுடன் கூட்டணி உண்டாகலாம் என கூறுகின்றனர்.இவ்வாறன பேச்சுக்கள் ஓர் புறம் இருக்க செல்வப் பெருந்தகை முன்னிலையில் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டுள்ள காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் திமுக காங்கிரசை எப்படி நடத்துகிறது என்பது குறித்து தெரிவித்திருந்தார்.அதில், திமுக நம்மை அடிமையாக வைத்திருக்கிறது என்றும் அதற்கு ஏற்றார் போல் நாம் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

அந்தந்த தொகுதியில் இருக்கும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோருக்கு திமுக என்ன செய்கிறது? அவர்களிடம் என்ன வருமானம் உள்ளது என்று கேள்விகளை முன் வைத்தார்.மேற்கொண்டு பூத் கமிட்டி உள்ளதா என்று திமுக  நம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர் இதெல்லாம் இருந்தால் தான் அரசியல் வேலைகளை செய்ய பணம் தருவதாகவும் கூறுகின்றனர்.இதை முழுமையாக தவிர்க்க எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசியது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலேயே செல்வப் பெருந்தகையின் பேச்சுக்கள் அனைத்தும் திமுகவை எதிர்ப்பது போல் இருந்த நிலையில் இது உண்மை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.