குடும்ப கட்சியாக இருந்த திமுக குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி! 

0
215
DMK which was a family party has become a family rule! Interview with Edappadi Palaniswami!
குடும்ப கட்சியாக இருந்த திமுக குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடும்ப கட்சியாக இருந்த திமுக கட்சி தற்பொழுது குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார்.
அத்து கடந்த சில தினங்களாக தமிழகத்தின் துணை முதல்வர் பதவி உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் இது குறித்து திமுக கட்சி சார்பாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
மேலும் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் இது குறித்து எனக்கு துணை முதல்வர் பதவியின் மேல் எந்தவொரு ஆசையும் இல்லை. இளைஞரணி செயலாளராக தற்பொழுது இருக்கிறேன். அந்த பதவியே நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கின்றது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் ஆவது குறித்தும் திமுக கட்சி குறித்தும் விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் “துணை முதல்வர் பதவியை உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவதை ஏற்க மாட்டோம். உதய்நிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக வரவேற்க முடியாது.
திமுக கட்சியில் துரை முருகன் போன்று பல மூத்த தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களில் யாருக்காவது துணை முதல்வர் பதவி கொடுத்தால் நன்றாக இருக்கும். துணை முதல்வர் பதவியை ஏற்க உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது.
முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் மகன் என்ற தகுதியை அடிப்படையாக வைத்து துணை முதல்வர் பதவியை உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவதை வரவேற்க முடியாது. தமிழகத்தில் திமுக கட்சி முன்பு குடும்ப கட்சியாக இருந்தது. தற்பொழுது திமுக ஆட்சி அமைத்த பின்னர் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது” என்று விமர்சித்து பேசியுள்ளார்.