ஸ்டாலின் அறிவிப்பால் கதறும் எடப்பாடி! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

0
112

மருத்துவக்கல்லூரியில் இடம் கொடுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திமுக அதை ஏற்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

திமுகவின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழக மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வெளிக்கொண்டு வரும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி கொடுத்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்தி செயல்படுத்தும் வலிமையானது தமிழக அரசிடம் இல்லை. இந்த அரசால் அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து வருடம் தோறும் பல மாணவர்களின் உயிரை காவு வாங்கி வருகிறது இந்த நீட் தேர்வு அதன்காரணமாக திமுக ஆட்சியில் அமர்ந்த உடனேயே இந்த நீட்தேர்வு முழுமையாக ரத்தாகும் என்பதை இந்த இடத்திலேயே நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் எத்தனை உயிர் போனால் எங்களுக்கு என்ன எங்கள் கல்லாப்பெட்டி நிரம்பினால் மட்டும் போதும் என்ற மனநிலையில் தான் இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள். நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களுடைய மருத்துவ கனவு பரிபோகி இருக்கின்ற இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு என்று அதிமுக அரசு அறிவித்து இருக்கின்றது. அதில் கூட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் தங்களுடைய டெல்லி முதலாளிகள் கேள்வி கேட்பார்கள் என்று பயந்து 7.5% மட்டுமே தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட அந்த சட்ட முன்வடிவு ஆளுநர் மாளிகையில் ஒரு நீண்ட உறக்கத்தில் இருந்தது ஆளுநர் மாளிகை முன்பு திமுக நடத்திய ஒரு மாபெரும் போராட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கண்டித்தாலும், இப்போது அது விழிப்பு கொண்டு செயல் வடிவம் பெற்று இருக்கின்றது.

நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன மீதம் இருக்கும் இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டிருந்தன அதற்கான கட்டணத்தை அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருக்கும் காரணத்தால், அதிமுக அரசை நம்பியிருந்த பெற்றோர்களும் மாணவர்களும் மீண்டும் மருத்துவ கனவு நான் வராமல் போய்விடுமோ என்ற மன நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அவர்களுடைய துயரை போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்பதை நினைவூட்டும் நேரத்தில் மாணவர்களுடைய நலனில் எப்போதும் அக்கறை கொண்டிருக்கின்ற திமுகவும் இந்த கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கின்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் ஸ்டாலின்.

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அமையவிருக்கும் திமுக ஆட்சியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அரசு பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கிராமப்புற ஏழை மற்றும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மருத்துவ கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியை நான் இப்பொழுதே கொடுக்குறேன் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.