Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா?

#image_title

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா?

திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நேற்று(ஜனவரி21) சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் கூறிய குட்டிக்கதை அங்கு இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று(ஜனவரி21) திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இந்த இளைஞரணி மாநாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு குட்டிக் கதை ஒன்று கூறினார். இந்த குட்டிக் கதை அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்தது என்று கூறலாம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய குட்டிக் கதை என்னவென்றால் “ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அந்த சிறுவன் அனைத்து ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டி ஓடி முதல் பரிசை வென்றான். தொடர்ந்து அந்த சிறுவன் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க ஊர்மக்கள் அனைவரும் அவனுக்காக கை தட்டினார்கள். ஆனால் ஒரு முதியவர் மட்டும் கை தட்டவில்லை.

இதையடுத்து அந்த சிறுவன் முதியவரிடம் போய் ஏன் நீங்கள் மட்டும் கை தட்டவில்லை என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் இதே ஊரில் கண் தெரியாத சிறுவன் ஒருவனும் போதிய உணவில்லாத ஒரு சிறுவனும் இருக்கின்றனர். அவர்களுடன் சென்று ஓடி வெற்றி பெற்று வா கை தட்டுகிறேன் என்று முதியவர் கூறினார்.

இதையடுத்து அந்த சிறுவனும் கண் தெரியாத சிறுவனுடனும் போதிய உணவில்லாத சிறுவனுடனும் ஓடி வெற்றி பெற்று வந்தான். ஆனால் இந்த முறை ஊர் மக்கள் யாரும் அவனுக்கு கை தட்டவில்லை. இதையடுத்து முதியவரிடம் அந்த சிறுவன் இந்த முறை ஊர் மக்கள் ஏன் கை தட்ட வில்லை என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் ‘நீ மீண்டும் அவர்களுடன் ஓடு. ஆனால் இந்த முறை அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு ஓடு என்று கூறினார்.

அதே போல அச்சிறுவனும் கண் தெரியாத மற்றும் போதிய உணவில்லாத சிறுவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு ஓடினான். இந்த முறை ஊர் மக்கள் அனைவரும் அச்சிறுவனுக்காக கை தட்டி பாராட்டினார்கள்.

அந்த சிறுவன் செய்ததைத் தான் தற்பொழுது திமுக செய்து கொண்டிருக்கின்றது. யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகின்றதோ அவர்களின் கரங்களை பிடித்துக் கொண்டு திமுக ஓடுகின்றது” என்று கூறினார்.

Exit mobile version