Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயாரை துரத்திவிட்ட திமுக காங் கூட்டணி! உதயநிதி செய்த நகைச்சுவை

சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயாரை துரத்திவிட்ட திமுக காங் கூட்டணி! உதயநிதி செய்யும் நகைச்சுவை

விடுதலைப் புலிகள் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மலேசியாவிலிருந்து மேல் சிகிச்சைக்காக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (16 ஏப்ரல் மாதம் 2010) சுமார் 10.45 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது காங்கிரஸ் தலைமையிலான திமுக அங்கம் வகித்த மத்திய அரசின் குடியேற்ற உரிமை அதிகாரிகள் அவரை விமானத்தில் இருந்து கூட இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.

அப்பொழுது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆகும், தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது,. இலங்கையில் ஈழத் தமிழர்களை கொடூரமாக கொன்று மன்னிக்க முடியாத பாவத்தை செய்து முடித்த ராஜபக்ஷேவிற்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுக தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டிருந்தது,.

மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் தான் இலங்கை தமிழர்களை கொல்ல ராஜபக்சேவிற்கு உதவிகளை செய்து கொண்டிருந்தனர், இதற்கு ஆதரவாக காங்கிரசோடு ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்துகொண்டு பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு திமுகவும் இருந்து வந்தது,. ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டு தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வில்லை என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறது திமுக.

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக மற்றும் காங்கிரஸ் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் ஈழதமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மசோதாவில் அனுமதிக்கவில்லை என்று தனது குற்றச்சாட்டை முன்னெடுத்து வருகிறது,.

இந்த சூழ்நிலையில் கடுமையான வார்த்தைகளை கொண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் பாஜக மற்றும் அதிமுக அரசுகளுக்கு எதிராக பேசி வருகிறார்,. தமிழக மக்களுக்கு தனது மகனின் முகம் நன்கு அறிமுகமாக வேண்டும் என்ற நோக்கத்தில் நான்கு படங்களில் நடிக்க வைத்து விட்டு தனக்கு பின்னால் தன் மகனை திமுக தலைவராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தற்போதே முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது மகன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்தவிட்டு ஏதோ மிகப் பெரிய சாதனை தனது மகன் செய்ததுபோல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்பது தமிழக மக்கள் நன்கு அறிந்த ஒன்றுதான்,. ஈழத்தமிழர்களை கொத்துக் கொத்தாக, கொத்துகுண்டுகளை கொண்டு கொடூர கொலை செய்த கொலைகாரர்களுக்கு ஆதரவாக இருந்து விட்டு,. தனது மகன்,மகள், பேரன் இவர்களின் மந்திரி பதவிக்காக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் வழியில் தமிழக மக்களை முட்டாளாக்க வேண்டும் என்ற நினைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுவது பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்,.
*தமிழக மக்கள்தான் சிந்திக்கணும்!

Exit mobile version