தொடங்கியது மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்!
திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் விவசாயிகள் பெருமளவு பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த பத்து நாட்களுக்கு ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதனையடுத்து மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ,பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ,தனியார்மயமாக்குதல், நீட்தேர்வு போன்ற விவகாரங்கள் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது அறிக்கையில் வெளியிட்டிருந்தார். இந்தப் போராட்டமானது தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் வரும் 20-ஆம் தேதி காலை 10 மணி அளவில் திமுக நிர்வாகிகள் தங்களின் இல்லம் முன் கருப்புக்கொடி ஏந்தி சக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருந்தார்.
அதன்படி இன்று காலை மத்திய அரசுக்கு எதிராக 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தற்போது பத்தாவது நாள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் தங்கள் வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா தலைமையில் தற்போது போராட்டம் நடைபெறுகிறது.அதேபோல தேனாம்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனையடுத்து அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கட்சித் தலைமை அலுவலகத்திலும் கருப்புக்கொடி கட்டப்படும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தாம்பரத்தில் டி .ஆர் .பாலு தலைமையில் தற்போது போராட்டம் நடத்தப்படுகிறது.இந்த எதிர்ப்பை மத்திய அரசு எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை அனைவரும் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.