மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!!
தற்போது திமுக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தின் மோசடி நிலவரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சமுத்திரகனான அவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மக்கள் இருப்பிடம் அருகிலேயே மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அம்மா “மினி கிளினிக்’ என்னும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 90 அம்மா “மினி கிளினிக்’களை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த மினி கிளினிக்-யில் அடிப்படை மருத்துவ உபகரணங்களுடன் ஒரு மருத்துவர் இது செவிலியர்கள் என அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதிகள் இருந்தன.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அம்மா மினி கிளினிக்-கள் படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன் செயல்பாடுகளும் குறைந்து வந்ததன. அதன் பின்னர் திமுக அரசு “மக்களைத் தேடி மருத்துவம்”, “வருமுன் காப்போம்” ஆகிய மருத்துவ திட்டங்களை கொண்டுவந்து அம்மா மினி கிளினிக் என்னும் திட்டத்தை இல்லாமல் செய்து விட்டது. தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் மக்கள் தேடி மருத்துவம் திட்டம் திமுகவினர் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவர்களும் உரிய செவிலியர்களும் இல்லை என்று குற்றம் சாட்டிய சவுக்கு சங்கர், மருந்தாளுநர்கள் அதாவது மருந்து, மாத்திரைகள் மட்டும் தருவதற்கு ஆட்கள் இருப்பதாக புகார் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் இயங்கும் அந்த வாகனங்கள் ஒரு மாதத்திற்கு சுமார் 2000 கிலோ மீட்டர் இயங்கி இருக்க வேண்டும். ஆனால் வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருக்கும் திமுகவினர் ஆயிரம் கிலோ மீட்டர் மட்டுமே வாகனத்தை இயக்கி 2000 கிலோ மீட்டர் வாகனங்கள் இயங்கியதாக பொய் கணக்கு காட்டி பண மோசடி ஈடுபடுவதாகவும் சவுக்கு சங்கர் அவர்கள், புள்ளி விவரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
சவுக்கு சங்கர் அவர்கள் இதுகுறித்து அடிப்படை ஆதாரங்களை தனது சமூக வலைத்தளங்கள் வாயிலாகும், ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட போகிறார் என்றும் கூறப்படுகிறது.