அரசு போக்குவரத்து துறையை தனியார் மையமாக்க திமுக போட்ட பலே திட்டம்!! வெட்ட வெளிச்சமாக்கிய பாமக தலைவர்!!

0
95
dmks-plan-to-turn-the-government-transport-department-into-a-private-center

PMK DMK: அரசு போக்குவரத்து துறை தனியார் மையமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பாமக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசு போக்குவரத்து துறையை தனியார் மையமாக திட்டமிட்டுள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆயுத பூஜையில் எண்ணற்ற தனியார் பேருந்துகள் அரசு ரீதியாக வாங்கி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் குறைவான கட்டணத்தையே வசூல் செய்தனர்.

ஆனால் தற்பொழுது தீபாவளி பண்டிகை நாளில் இதே போல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டும் உயர் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது எந்த அளவிற்கு சரியானதாக இருக்கும். அதேபோல ஆட்சிக்கு வரும்பொழுது 8000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வாங்கப்படும் என அறிக்கை வெளியிட்டனர்.

ஆனால் தற்பொழுது வரை 1086 பேருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் வாங்குவதற்கு இவர்களுக்கு என்ன பிரச்சனை, மேலும் 25 ஆயிரம் காலி பணியிடங்கள் போக்குவரத்து துறையில் இருக்கும் பட்சத்தில் இதனை நிவர்த்தி படுத்தாமல் ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பது ஏன்??

இதையெல்லாம் அரசு போக்குவரத்தை தனியார் மையமாக்க வைக்கும் நோக்கம் தான், அதன் திட்டத்தினால் தான் இத்தனையும் செய்கின்றனர். ஆனால் இதனை ஒருபோதும் பாட்டாளி மக்கள் கட்சி விடாது என கூறியுள்ளார்.

மேற்கொண்டு தீபாவளி பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை வசூல் செய்வதையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.