உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற திமுக போடும் இரட்டை வேடம்! அண்ணாமலை அதிரடி கருத்து!

0
128

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் ஆர்வத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் ஆளுங்கட்சியான திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என தெரிவித்து அதற்கான பணிகளை முடிக்கிவிட்டு இருக்கிறது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கீழநத்தம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பொதுமக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் தான், ஆனால் அது மாநில அரசு செயல்படுத்தும் திட்டம் கிடையாது என தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி படைபலம், பண பாலத்தை கடந்து நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, திமுக தேர்தலுக்கு முன்னர் சொன்னதை ஒன்று கூட தற்போது செய்வது இல்லை, எல்லோருக்கும் அது தெரிந்ததுதான் ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவது திமுகவின் வழக்கமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசுத் திட்டத்தில் அவர்களுடைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம் மத்திய அரசின் திட்டத்தை எந்தவிதமான கையூட்டு லாபமும் இல்லாமல் பொதுமக்களுக்கு எடுத்துக் கொண்டு சேர்ப்பதில் இருக்க வேண்டும். நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியினர் அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்பந்தம் செய்து வருகிறார்கள் என கூறியிருக்கிறார்.