உடலில் உற்பத்தியாகும் தேவையற்ற கழிவுகள் சிறுநீரகம் வழியாக திரவ வடிவில் வெளியேறுகிறது.இந்த செயல் சீராக நடந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.சிறுநீரின் நிறம்,சிறுநீர் வாடை,சிறுநீர் கழிக்கும் சமயத்தில் வலி,எரிச்சல் ஏற்படுதல் போன்றவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது குமிழ்கள் வெளியேறும்.இது சில சமயம் வரக் கூடிய ஒன்று தான்.ஆனால் அடிக்கடி சிறுநீரில் குமிழ்கள் வெளியேறுகிறது என்றால் அலட்சியம் கொள்ளாமல் உரிய தீர்வு காண வேண்டும்.தண்ணீர் அதிகம் பருகாமல் இருந்தாலோ,சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்திருந்தாலோ சிறுநீரில் குமிழ்கள் வெளியேறும்.
மேலும் சிறுநீரில் அதிகளவு புரதம் வெளியேறினால் அது அதிக உடலில் புரதம் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.இது புரத கசிவை குறிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.உடலில் போதிய நீர்ச்சத்து இல்லையென்றால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.
எனவே சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் எலுமிச்சை சாறை சூடான நீரில் கலந்து பருகி உரிய நிவாரணம் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)எலுமிச்சம் பழத்தின் சாறு – ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து அதன் விதைகளை நீக்கிவிட்டு ஒரு கிண்ணத்திற்கு சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் அல்லது ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு சூடுபடுத்த வேண்டும்.
**பிறகு இந்த நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த எலுமிச்சை பானத்தை காலை,மாலை என இருவேளை பருகி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள தொற்றுக் கிருமிகள் முழுமையாக அழிந்துவிடும்.வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உட்கொண்டால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.