அஜீரணக் கோளாறால் குழந்தைகள் அவதிப்படுறாங்களா? இந்த பொருளை நீரை காய்ச்சி கொடுங்க!!

0
62

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஜீரணக் கோளாறால் அவதியடைந்து வருகின்றனர்.மோசமான உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.அஜீர்ணக் கோளாறால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,புளி ஏப்பம்,வயிறு இரைச்சல்,ஆசன வாய் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.

அஜீரணக் கோளாறுக்கு மருந்து மாத்திரை இருந்தாலும் வீட்டு வைத்தியம் மட்டுமே இதற்கு சிறந்த தீர்வாக உள்ளது.குறிப்பாக குழந்தைகள் அஜீரணக் கோளாறை அடிக்கடி சந்திக்கின்றனர்.நார்ச்சத்து குறைவான உணவுகளை கொடுப்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.குழந்தைகளால் இதை சொல்ல முடியாது.ஆகையால் பெற்றோர் தான் இந்த பாதிப்பை கண்டறிந்து உரிய மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும்.

சுக்கு மற்றும் ஜாதிக்காயை இடித்து நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.அஜீரணக் கோளாறை சரி செய்யும் மற்றொரு வைத்தியம் தரப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்:

**சுக்கு – ஒரு பின்ச்
**மிளகு – இரண்டு
**ஓமம் – கால் ஸ்பூன்
**வேப்பங் கொழுந்து – ஒரு கொத்து
**கடுக்காய் பொடி – கால் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

ஒரு பின்ச் சுக்கை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.அடுத்து மிளகு,ஓமத்தை கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும்.

அதன் பிறகு ஒரு கொத்து வேப்பங் கொழுந்தை பறித்துக் கொள்ளவும்.ஐந்தாவது பொருளான கடுக்காய் பொடியாக கிடைக்கும்.நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கடுக்காய் பொடியை வாங்கிக் கொள்ளவும்.

பிறகு சுக்கு,மிளகு,ஓமத்தை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து 3/4 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து கடுக்காய் பொடி மற்றும் வேப்பங் கொழுந்தை போட்டு 3/4 கப் தண்ணீர் 1/4 கப் அளவிற்கு சுண்டி கொதித்து வரும் வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த பானத்தை ஆறவைத்து வடிகட்டி குழந்தைகளுக்கு தினமும் காலை,மதியம்,மாலை மற்றும் இரவு என நான்கு வேளை அரை அவுன்ஸ் கொடுத்தால் ஒரே நாளில் அஜீரணக் கோளாறில் இருந்து மீண்டுவிடுவார்கள்.

இந்த பானத்தை கொடுத்தால் அடைபட்டு கிடந்த மலக் கழிவுகள் வெளியேறிவிடும். அஜீரணத்தால் ஏற்பட்ட ஜுரம் முழுமையாக குணமாகிவிடும்.