Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!

நாம் அனைவரும் பூஜை செய்வோம் ஆனால் அதை முறையாக செய்கிறோமா என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமக்கு துன்பங்களை உண்டு பண்ணும்.

இந்த விஷயங்களை நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை முறையாக கடைபிடித்தால் வாழ்க்கை துன்பங்கள் இன்றி தழைத்தோங்கும்.

1. நாம் பூஜை என்றாலே தேங்காயை பூஜைக்கு உடைத்து வைப்போம். பூஜை முடிந்ததும் அதை சமையலுக்கு பயன்படுத்துவோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் அந்த தேங்காயை சமைத்து மறுபடியும் தெய்வத்திற்கு படைக்க கூடாது. அந்த தேங்காயில் சமைத்த உணவுகளை கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்க கூடாது.இந்த தவறை செய்து விடாதீர்கள்.

2. அது போல நெய்வேத்தியங்களை படைக்கும் பொழுது உலோக பாத்திரத்தில் படைக்க கூடாது. இயற்கை முறையான வாழை இலையில் தான் கடவுளுக்கு படைக்க வேண்டும். வாழை இலை மீது அனைத்து நெய்வேத்திய பொருட்களை வைத்து வணங்க வேண்டும்.

3. கோவிலுக்கு செல்லும் முன் உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறைகளில் உள்ள கடவுளுக்கு விளக்கை ஏற்றி வைத்து விட்டு செல்லவும்.

4. நீங்கள் கோவிலுக்கு செல்லுகிரீர்கள் என்றால் அதற்கு முன் வீட்டில் கட்டாயம் கோலம் போட வேண்டும். அது மிகவும் நல்லது.

5. வீட்டில் ஏற்றி வைத்திருக்கும் எண்ணெயை கையால் தொடவே கூடாது. அது போல தலையில் தப்பி தவறி துடைத்து விடாதீர்கள். அது மிகப்பெரிய தவறு தெய்வ குத்தம் ஆகும்.

6. கோவிலுக்கு சென்று வரும்போது கோவிலில் அமர்வார்கள். ஆனால் மகாலட்சுமி இருக்கும் விஷ்ணு கோவிலில் அமரக்கூடாது. லட்சுமியை தரிசித்து விட்டு நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும்.

7. குபேர சிலையை அனைவரும் பார்க்கும் வகையில் வாசலுக்கு எதிராக வைக்க வேண்டும்.

8. உண்டியல் பொம்மை குபேர வடிவில் இருப்பது மிக நல்லது.

9. வாசலில் கதவிற்கு பின் ஸ்ரீ சக்கரம்,திரிசூலம், சுவஸ்திக் அல்லது ஓம் கடவுள் சின்னங்களை வரைந்து வையுங்கள்.

10. பூஜை அறையில் நிறைய சாமி படங்களை வாங்கி குவித்து நெருக்கமாக இருக்க கூடாது. இடைவெளியுடன் இருப்பது மிக அவசியம்.

11. தெய்வ படங்கள் உடைந்து விட்டால் கோவிலில் சென்று வைத்து விடுங்கள் . வீட்டில் இருப்பது நல்லது அல்ல.

இதை அனைத்தும் வைத்து கொள்ளுங்கள்.இந்த தவறை செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள்.

Exit mobile version