Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்வ செழிப்புடன் வளமாக வாழ மார்கழி “லட்சுமி குபேர பூஜை” செய்யுங்கள்!!

#image_title

செல்வ செழிப்புடன் வளமாக வாழ மார்கழி “லட்சுமி குபேர பூஜை” செய்யுங்கள்!!

இந்த பூஜையை மார்கழி மாதத்தில் வரக் கூடிய கடைசி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இந்த பூஜை மேற்கொள்வதற்கு முந்தின நாள் வியாழன் அன்று வீடு பூஜை அறையை சுத்தம் செய்து குபேரர் சிலையை அலங்கரித்து பூஜை செய்யவும்.

அடுத்து நாள் வெள்ளி அன்று காலை பிரம்ம முகூர்த்தநேரத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யவும்.
இந்த பூஜை செய்ய 24 வெற்றிலை மற்றும் 12 கொட்டைப்பாக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வீட்டில் குபேரருக்கு நெய்வேத்தியமாக இனிப்பான பால் பாயாசத்தை செய்து கொள்ளவும். இந்த பூஜை செய்ய பூஜை அறையில் குபேரர் மற்றும் லட்சமி தாயாரின் படம் இருக்க வேண்டும். 24 வெற்றிலையை இரண்டாக அதாவது 12 வெற்றிலையாக வரிசையாக வைத்து வெற்றிலைக்கு மேல் 12 கொட்டைப்பாக்கை வைக்கவும்.

அடுத்து 12 வெற்றிலை மேலேயும் ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். அடுத்து 108 சில்லறை நாணயத்தை எடுத்து ஒரு தட்டில் தீபத்தின் முன் அமர்ந்து இந்த சில்லறை நாணயத்தை கையில் எடுத்து “ஓம் குபேராய நமக” என்ற நாமத்தை சொல்லவும்.

மீண்டும் அந்த தட்டில் இதே போல் 108 முறை செய்ய வேண்டும். இந்த சில்லறை நாணயம் நீங்கள் கையில் எடுத்து மீண்டும் தட்டில் கொட்டும் போது எழுப்பும் ஒளி குபேரருக்கு மிகவும் உகந்ததாக ஒன்றாக இருக்கிறது.

இந்த பூஜையை மீண்டும் அதே வெள்ளி அன்று மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு அதே வெற்றிலை மற்றும் நாணயம் வைத்துக் கொள்ளவும். நெய்வேத்தியம் மட்டும் புதிதாக செய்து வைக்க வேண்டும். பூஜை செய்து முடித்த பிறகு ரூபாய் நாணயத்தை நீங்கள் புழக்கத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பூஜையால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.

Exit mobile version