Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மெட்ரோ ரயிலில் இந்த பொருளை எடுத்து செல்ல கூடாது!! தடை போடும் ரயில்வே!!

Do not carry this item in metro train!! Blocking Railways!!

Do not carry this item in metro train!! Blocking Railways!!

மெட்ரோ ரயிலில் இந்த பொருளை எடுத்து செல்ல கூடாது!! தடை போடும் ரயில்வே!!

சென்னையை பொறுத்தவரை அதன் அதிகமான மக்கள் தொகை காரணமாக அனைத்து போக்குவரத்துகளும், மக்கள் பயன்பாட்டில் இருந்து கொண்டேதான் உள்ளது. முதலில் பஸ் மற்றும் மின்சார ரயில்களில் மக்கள் பயணம் செய்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது.

நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ சேவைகள் 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

கடந்த வருடம் மட்டும் மெட்ரோ பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை  6 கோடி என்ற அளவில் உள்ளது. மாத அளவில், கடந்த மாதம் மட்டும் 67 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் புதிய விதிமுறை ஒன்றை கூறியுள்ளது. அதாவது, மெட்ரோ ரயிலில் சிறிய அளவிலான, மடக்கக் கூடிய சைக்கிள்களை கொண்டு செல்ல முடியும். இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. சிறப்பு பெட்டி கட்டணத்திலேயே சைக்கிளை எடுத்து செல்லலாம். இந்நிலையில் இதற்கு தடை போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காரணம் நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பயணிகளுக்கு இட நெருக்கடியும்,  இடையூறும் ஏற்படும் என்பதால் இதை தடை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக அரசு சிங்கார சென்னை கார்ட் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிங்கரா சென்னை கார்டை வைத்து பஸ், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்க முடியும். இதற்காக கார்ட் ஒன்று வழங்கப்படும்.

மெட்ரோவில் பயணம் செய்யும் போது, மெட்ரோ நிலையங்களில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம். புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது, டிக்கெட் சோதனை செய்யும் சமயங்களில் ஸ்கேன் செய்து கொள்ளலாம். பேருந்துகளிலும், நடத்துனரிடம் ஸ்கேன் செய்து பயணம் செய்யலாம்.

இந்த ஒரு கார்டை பயன்படுத்துவதின் மூலம் மக்கள் அனைத்து போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Exit mobile version