Amavasai in tamil: அமாவாசை தினத்தன்று பொதுவாக நம் பித்ருக்களுக்கு நாம் விரதம் எடுத்து அவர்ளை வணங்கி, அவர்களின் நினைவில் அவர்களுக்கு தர்பணம் கொடுப்போம். மற்ற நாட்களை விட அமாவாசை தினம் முக்கிய நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் அமாவாசை தினம் நம் முன்னோர்களை நினைவில் வைத்து அவர்களின் ஆசியை பெறுவதது என்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஒரு சிலர் சில முக்கியமான நிகழ்வுகளை அமாவாசை தினத்தில் செய்வார்கள். அவ்வாறு செய்யலாமா? மேலும் அமாவாசை தினத்தில் செய்யக் கூடாத நிகழ்வுகள் என்ன என்பதை இந்த பதிவில் (Amavasai Naalil seiya koodathathu) காணலாம்.
அமாவாசை தினத்தில் செய்ய கூடாதது
முக்கியமாக அமாவாசை தினத்தில் ஒரு சிலர் தெரிந்தும், தெரியாமலும் அல்லது மறந்து வாசலில் கோலம் இடுவார்கள். அவ்வாறு அவர்கள் அமாவாசை விரதத்தில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்பணம் கொடுப்பதற்காக வீடுகளை சுத்தம் செய்துவிட்டு அதன்பிறகு வாசலில் சாணம் தெளித்து அல்லது தண்ணீர் தெளித்து கோலம் இடுவார்கள். இவ்வாறு அமாவாசை அன்று கோலமிடலாமா? என்றால் கோலமிட கூடாது.
அமாவாசை தினத்தில் கோலமிடுவது மிகவும் அபத்தமானது. ஆம் பொதுவாக கோலம் என்பது நம் வீட்டில் மஹாலெட்சுமியை வரவேற்பதற்காக, மங்களகரமான நிகழ்விற்கான ஒன்றாக நாம் கருதுகிறோம். அவ்வாறு இருக்கையில் அமாவாசை தினத்தினத்தன்று இறந்து போன நம் பித்ருக்குளுக்கு தர்பணம் கொடுப்பதால், வாசலில் கோலமிட கூடாது.
அமாவாசை தினத்தன்று வீட்டிற்கு வரும் நம் பித்ருக்கள் வாசலில் போடப்பட்டுள்ள கோலத்தை கவனித்துவிட்டு, வீட்டில் சுபநிகழ்வு நடைபெறுவதாக எண்ணி வருத்தத்துடன் சென்றுவிடுவார்கள் என கூறப்படுகிறது. எனவே அமாவாசை தினத்தன்று வாசலில் கோலம் பாேடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இதை வைத்தால் போதும்…!! கஷ்டங்கள் எல்லாம் பறந்து போய்விடும்…!!