இந்த தப்ப செய்யாதீங்க! கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!

Photo of author

By Parthipan K

10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்ணில் பள்ளிகள் செய்யும் கோளாறு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள்  காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. அதன்படி ,மதிப்பெண் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு அணைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.     

இந்நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் கோளாறு  செய்வதாக புகார்கள்  எழுந்த வண்ணம் உள்ளன.அந்த புகாரில்,தங்கள் பிள்ளைகளின் அதிக மதிப்பெண்களுக்காக பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.  

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவிக்கையில் ,மாணவர்களின் மதிப்பெண்ணில் விளையாடுவது அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடுவதற்கு சமம்.எனவே மதிப்பெண்களில் கோளாறு செய்யும்  பள்ளிகள் மீது கடுமையான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version