Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

பிரச்சனையை நீங்கள் தேடி போக வேண்டாம் பிரச்சனை உங்களை தேடி வரும்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷம் ராசி அன்பரகளே இன்று உங்களுக்கு தன வருமானம் கிட்டும்.ரத்தம் சம்மதமானவர்களுடன் சிறிதளவு கருத்து வேறுபாடு ஏற்படும்.குடும்ப ரகசியங்களை யாரிடமும் கூறக் கூடாது.முக்கியமாக எடுக்கும் நடவடிக்கைகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது.இன்று மிகவும் கவனமாக செயல் பட வேண்டும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்படும் நல்ல நாளாக அமையும்.இன்று உங்களுக்கு தன வருமானங்கள் பெருகும் நன்னாள்.எந்த காரியம் தொடங்கும் முன்னும் பொறுமையா செயல்பட வேண்டும்.உங்களது முக்கியமான முடிவுகளை கவனத்துடன்  ரகசியமாக பேணிகாக்க வேண்டும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே நண்பர்களால் அதிக அளவு நன்மை கிடைக்கும்.பெண்களுக்கு புதியவகை வேலைகள் கிடைக்கும்.குடும்பத்தில் பெரியவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.உங்களுக்கு அதிக அளவு தன வருமானம் கிடைக்கும்.நிதானத்துடன் செயல்படும்போது அதிக அளவு வெற்றிகளை குவிப்பீர்கள்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே உங்களுக்கு வெளிநாட்டு சம்மதமான வேலைகள் கிடைக்கும்.சிறிதளவு அலைச்சல்கள் ஏற்படும்.வேலை வாய்புகள் மற்றும் படிப்பில் அதிக அளவு வெற்றிகளை குவிப்பீர்கள்.வேளைகளில் குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெற்றியை காண்பீர்கள்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே நீங்கள் உபயோகிக்கும் எதாவது ஒரு எலக்ட்ரிஷியன் பொருளில் பழுது ஏற்படும்.தந்தையின் உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும்.எடுத்த முயற்சிகளில் வெற்றி வரும்.மனைவி மற்றும் சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்.சகோதரியின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.வேலை செய்யும் ஊடகங்களில் தன்னுடன் வேலை பார்க்கும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் வந்து சேரும் மிக அமைதியாக அதை கையாள வேண்டும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும்.நல்ல வெற்றிகள் குமியும் அற்புதமான நாள்.வராத பணங்கள் அனைத்தும் இன்று தானாக வீடு தேடி வரும்.இன்று நீங்கள் சிறிதளவு பதற்றமாகவே காணப்படுவீர்கள்.ஆகையால் நிதானமாக முடிவை எடுக்க வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே அதிக அளவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.மேலும் வேளை பார்க்கும் இடங்களில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.உடல் நலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.பிள்ளைகள் வளர்ப்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே உங்களுக்கு அதிக அளவு வெற்றிகளை பெற்றுத்தரும் நன்னாள்.முக்கிய முடிவுகளை தள்ளிபோடுவது மிகவும் நல்லது.அதிக அளவு தன லாபம் கிடைக்குக் நன்னாள்.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகளை தரும்.வீடு கட்டும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போவதால் அதிக அளவு நம்மை கிடைக்கும்.நண்பர்களின் அனுசரணை அதிக அளவு இன்று கிடைக்கும்.

கும்பம்;

கும்பம் ராசி அன்பர்களே அதிஷ்டங்கள் பெருகும் நல்ல நாள்.உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.ஏனென்றால் சிறு சிறு பூச்சிகளால் எதாவது விஷக்கடி போன்று ஏற்படும் வாய்புகள் உள்ளது.மனதில் நிம்மதி ஏற்படும்.தன லாபம் பெருகும் நல்ல நாள்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை அலுவலகத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும்.இன்று மனமகிழ்ச்சியாக இருப்பிர்கள்.தங்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.எதிர்பார்கின்ற காரியங்கள் அனுகூலமாக நடைபெறும் நல்லநாள்.

Exit mobile version