Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Do not quit this government job! Use it when it is available!

Do not quit this government job! Use it when it is available!

இந்த அரசு வேலையை விட்டுவிடாதிர்கள்! கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

ஆசிரியர் பணிக்கான வேலைகளை அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 2,098 காலி பணியிடங்கள் உள்ளன.இதில் முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் வந்துள்ளன.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளை மேற்கொள்ளலாம்.

இந்த தேர்வில் கலந்துக்கொள்ள தேவையான தகுதிகள்:

உயிர்வேதியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், நிலவியல், வரலாறு, இந்திய கலாச்சாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், விலங்கியல் போன்ற பாடங்களில் 50 சதவீதம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் முதுகலை பட்டம் முடித்தவர்கள் மற்றும் பி.எட் முடிதவரும் விண்ணப்பிகிலாம்.

இத்தேர்வுக்கான கட்டணம் விவரம்:

இந்த தேர்வுக்கான கட்டணம் ரூ.500. எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சிஏ பிரிவினர்கள் தேர்வு கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளனர்.இந்த கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திக் கொள்ளலாம்.

www.trb.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு தகுதியானவர்களை கணினி வழி எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இந்த எழுத்து தேர்வு நடைபெறும் தேதி 2021 ஜூன் 25 மற்றும்   26 தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி நாள் 01.03.2021 முதல் 25.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Exit mobile version