Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாதிரி பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள்!! ஆபத்து விளைவிக்கும் அதிர்ச்சி தகவல்!!

இந்த மாதிரி பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள்!! ஆபத்து விளைவிக்கும் அதிர்ச்சி தகவல்!!

அப்போது எல்லாம் பல் துவகுவதற்கு இயற்கை முறையில் உள்ள வேப்பம் குச்சி கறி, உப்பு எலுமிச்சை சாறு, இது போன்றவைகளை பயன்படுத்துவார்கள். அதனால் பற்கள் வலுவாகவும் பற்களுக்கு எந்த பிரச்சனையும் வராமலும் உடலுக்கு எந்த தீங்கினை விளை விக்காமலும் இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் பேஸ்ட் பயன்படுத்துவதால் பல்லிருக்கும் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் அந்த பேஸ்டில் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகும்.

வாய்ப்புண் அல்சர் போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் பேஸ்ட் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் பெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. பொதுவாக பேஸ்ட்டில் ஃப்ளோரைடு கன்டென்ட் இருக்கும். இந்த ஃப்ளோரைடு பற்களில் ஏற்படும் கரைகளை நீக்குகிறது மற்றும் பல் சொத்தை ஏற்படாமலும் தடுக்கிறது. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட அளவு தான் இருக்க வேண்டும். தற்போது வருகிற பேஸ்ட்களில் ஃப்ளோரைடு அதிகமாக இருக்கிறது. இது போன்ற ஃப்ளோரைடு கன்டென்ட் அதிகமாக உள்ளதால் உடல்களில் பல பிரச்சனைகள் ஏற்படும். முதலில் எந்த வயதினர் எந்த மாதிரி பேசி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

மூன்று வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு ப்ளுரைடு இல்லாத பேஸ்ட்டை கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் டேஸ்டை துப்பாமல் அப்படியே முழுங்கி விடுவார்கள் அதில் வயிற்றுக்குள் போகி பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மூன்று வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தைகள் பயன்படுத்தும் பேஸ்டை மட்டும் தான் கொடுக்க வேண்டும்.

மேலும் பேஸ்ட் உபயோகப்படுத்தும் போதும் அதிக அளவு பயன்படுத்தாமல் ஒரு பட்டாணி அளவு பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். அதனையடுத்து அல்சர் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது எஸ் எஸ் இல்லாத பேஸ்ட்டை பயன்படுத்துவது அவசியமானதாகும். ஆபத்து தரக்கூடிய தீங்கு விளைவிக்க கூடிய பேஸ்ட்டை பயன்படுத்தினால் கேன்சர் கூட வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் பேஸ்ட்டை பயன்படுத்துவதற்கு முன் அதில் என்னென்ன உள்ளது பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

Exit mobile version