மக்களே உங்கள் பண வீக்கம் போக வேண்டுமா? இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள்!
கோமதி சக்கரத்தினை மகாலட்சுமிக்கு இணையாக நினைத்து மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக கோமதி சக்கரம் நம்பப்படுகிறது. கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் அம்சம் உள்ளது. இதை வைத்திருப்பவர்களிடம் குபேர வாசம் உண்டாகும்.
கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம் கோமதி சக்கரத்தில் உள்ளது. நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெற செய்கின்றன.கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது.
கோமதி சக்கர பலன்கள்:
பணக்கஷ்டம்,கடன் பிரச்சனை, ஆரோக்கியமின்மை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை, கணவன்-மனைவி சண்டை, திருமணத்தடைகள், குழந்தை இல்லாமை, வேலை இல்லாமை இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபட கோமதி சக்கரத்தை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடவும்.
இந்த கோமதி சக்கர மரத்தை பூஜையறையில் வைத்து தினந்தோறும் குளித்துவிட்டு சந்தனம், குங்குமம் மற்றும் மஞ்சள் வைத்து வழிபட்டு வரும்போது உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையும், அமைதியையும் உண்டாக்கும்..