Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் கனவில் பாம்புகள் அடிக்கடி வருகிறதா..?!கனவில் பாம்பு வந்தால் நல்லதா..?! கெட்டதா..?!

கனவுகளே வாழ்க்கை இல்லை என்றும், கனவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் கூறுவார்கள். பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் கனவு என்பது உருவாகும். குழந்தைகள் தூங்கும் பொழுது கனவு காண்பதன் மூலம் தான் சிரிப்பது, அழுவது போன்ற செயல்களை செய்கின்றன.

தூங்கும் பொழுது கனவுகள் வருவது என்பதை தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகும். அதேபோன்று நாம் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு என்பதும் கூறப்பட்டு வருகிறது. ஒருவரது ஜாதகத்தில் ராகு புத்தி அல்லது ராகு திசை ஏற்பட்டால் அவரது கனவில் பாம்புகள் தோன்றும். இதற்குத் தகுந்த பரிகாரத்தை செய்வது நல்லது. குலதெய்வத்திற்கு ஏதேனும் நேர்த்திக்கடன் வைத்திருந்தாலும் பாம்புகள் கனவில் தோன்றும்.

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் சைவர்களாக இருந்தால் சிவன் கோவிலுக்கும், வைணவர்கள் பெருமாள் கோவிலுக்கும் சென்று வந்தால் பலன் கிடைக்கும். பாம்புகள் நமது கனவில் எப்படி வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து தான் தற்போது காணப்படுகிறோம்.

பொதுவாகவே பாம்பை கனவில் காண்பது உங்களுடைய நெருங்கிய நண்பர்களின் மூலமாக பொருள் இழப்போ அல்லது உங்கள் நண்பர்களிடம் மனக்கசப்போ ஏற்படலாம். வீட்டில் பாம்பு வலம் வருவது போல கனவு கண்டால், உறவினர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம் என்பதை குறிப்பிடுகிறது.

உங்கள் தலையில் பாம்பு அமர்ந்திருப்பது போல கனவு கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும். மாற்றத்தை சரியான முறையில் உபயோகித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். பாம்பு உங்களுக்கு முத்தமிடுவது போல கனவு கண்டால் எதிரிகளால் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும்.

பாம்பானது விஷத்தை கக்கி கொண்டிருப்பது போல கனவு கண்டால், தொழில் சார்ந்த செயல்களில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பாம்பு பால் குடிப்பது போல கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதை குறிக்கிறது.

பாம்பு சீறுவது போல கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று கவனம் தேவை என்பதை குறிக்கிறது. பல பாம்புகள் உங்களை சூழ்ந்து கொண்டது போல கனவு கண்டால் சில தடைகளால் காலதாமதம் உருவாகலாம் என்பதை குறிக்கிறது.

மலைப்பாம்பு உங்கள் உடலை சுற்றி முழுங்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு வரவிருந்த பெரிய ஆபத்து விலகி விட்டதாக அர்த்தம். பாம்பு மேலே இருந்து கீழே விழுவது போல கனவு கண்டால் பணவிரயம் உருவாகும் என்பதை குறிக்கிறது.

மலைப்பாம்பை கனவில் கண்டால் தொல்லைகள், பிணிகள் மற்றும் நம்மை பிடித்திருக்கும் தரித்திரங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்குவதாக அர்த்தம். பாம்பு இறந்து கிடப்பதை போல கனவு கண்டால் துக்க செய்தி நம்மை தேடி வரும் என்பது பொருள்.
பாம்பு உங்களைக் கண்டு பயந்து ஓடுவதைப் போல கனவு கண்டால், தங்களுக்கு வரவிருந்த ஆபத்து விலகி விட்டதாக அர்த்தம். பாம்பு உங்கள் முன்பு படம் எடுத்து ஆடுவது போல கனவு கண்டால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

திடீரென பாம்பு உங்களை விரட்டி வந்து கடிப்பது போல கனவு கண்டால், உங்களின் கஷ்டங்கள் உங்களை விட்டு அகலும், கடன் தொல்லைகள் நீங்கும். தன லாபம் ஏற்படும், எதிர்ப்புகள் குறையும். பாம்பு புற்றை கனவில் கண்டால், புதிய முதலீடு செய்யக்கூடிய காரியங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். பாம்பு தரையில் கொத்துவது போல கனவு கண்டால் ஒருவரை பிடித்திருந்த தோஷங்கள் மற்றும் பிணிகள் விலகியதாக அர்த்தம். பாம்பு வீட்டிற்குள் வந்து விட்டு வெளியில் செல்வது போல கனவு கண்டால், குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என்பதை குறிக்கிறது.

இரட்டைப் பாம்புகளை கனவில் கண்டால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப் போவதாக அர்த்தம். பாம்பை நீங்கள் கொல்வது போல கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் நீங்கும் என்பது அர்த்தம்.

Exit mobile version