முன்பெல்லாம் மாவு அரைத்தால் அதை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் காலி செய்துவிடும் இல்லத்தரசிகள் தற்பொழுது பிரிட்ஜ் பயன்பாடு வந்தவுடன் வாரக் கணக்கில் வைத்து பயன்படுத்த பழகிவிட்டனர்.
ஒருமுறை மாவு அரைத்தால் பல நாட்களுக்கு அதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் தற்பொழுது அதிகரித்து வருகிறது.இயந்திர வாழக்கையில் கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு சீக்கிரம் உணவு சமைத்து தருவதற்காக முன்கூட்டியே ப்ரீ மெனு பிளான் தயாரித்து அதன்படி உணவு சமைக்கும் வழக்கத்தை ;பெரும்பாலான இல்லத்தரசிகள் விரும்புகின்றனர்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட்,புளிக் கரைசல் போன்றவற்றை ஒன்று அல்லது 2 வாரங்களுக்கு பயன்படுத்தும் அளவிற்கு தயாரித்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கின்றனர் .அதேபோல் காய்கறிகளை வெட்டி வைப்பது,இட்லி,தோசைக்கு மாவு அரைப்பது என்று அனைத்தையும் முன்கூட்டியே செய்து வைத்து தங்கள் சமையலை எளிதாக்குகின்றனர்.
இவ்வாறு பதப்படுத்தும் உணவுகளை குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த வேண்டும்.நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்தினால் உடல் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.அதன்படி அரிசி மாவை எத்தனை தினங்கள் வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஒருமுறை தயாரிக்கப்பட்ட அரிசி மாவை அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று தினங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.மூன்று தினங்கள் கடந்த பிறகு மாவை பயன்படுத்தினால் வாயுத் தொல்லை,வயிறு உபாதை,வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை,நெஞ்செரிச்சல்,குமட்டல்,புட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
புளித்த மாவு மற்றும் நீண்ட காலம் பதப்படுத்தப்பட்ட மாவை உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தற்பொழுது உடல் சார்ந்த பாதிப்புகளை அனுபவிக்க இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்பது தான் நிதர்சனம்.எனவே பிரிட்ஜில் நீண்ட நாட்களுக்கு அரைத்த மாவு வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.