இனி வேஸ்ட் டீத்தூளை தூக்கி எறிவதற்கு முன் இப்படி செய்யுங்கள்!! யூஸ்ஃபுல் ஹோம் ரெமெடிஸ்!!

0
325
Do this before throwing away any more waste tea powder!! Useful Home Remedies!!

நம் அனைவரும் பிடித்த பானமாக தேநீர் உள்ளது.பொதுவாக காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிப்பதை பலரும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.தேநீரின் சுவைக்கு முக்கிய காரணம் டீ தூள் தான்.இதை பயன்படுத்தி டீ தயாரித்த பிறகு டீ தூள் கழிவுகளை கொட்டி விடுவது வழக்கம்.ஆனால் இந்த டீ தூள் கழிவுகள் பல விஷயங்களுக்கு உதவும் என்பதை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

டீ தயாரித்த பிறகு டீ தூள் கழிவுகளை சேகரித்து கொள்ளவும்.பிறகு இதை வெயிலில் காயவைத்து அரைத்து செடிகளுக்கு உரமாக கொடுக்கலாம்.குறிப்பாக ரோஜா செடிகளுக்கு டீ தூள் கழிவுகளை உரமாக கொடுத்தால் அதிக பூக்கள் பூக்கும்.

டீ தூள் வேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வடிகட்டி கொள்ளவும்.பிறகு இந்த டீ தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.இதை ஆறவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த ஸ்பிரேவை கண்ணாடி பொருட்கள் மீது அப்ளை செய்து துடைத்தால் புதிது போன்று பளிச்சிடும்.

டீ தூளை நன்றாக காயவைத்து அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.இதை காலுறைகளில் கொட்டி சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து சுத்தம் செய்தால் துர்நாற்றம் மற்றும் அழுக்குகள் நீங்கும்.டீ தூள் கழிவுகளை நன்கு காயவைத்து பாதங்களில் அப்ளை செய்து சுத்தபடுத்தினால் கால்களில் வீசும் துர்நாற்றம் கட்டுப்படும்.